நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... 26 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார் அபி சித்தர்!!

By Narendran S  |  First Published Jan 17, 2023, 7:17 PM IST

பொங்கலையொட்டி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 


பொங்கலையொட்டி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முன்னதாக இன்று (ஜன.17) காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அல்ங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். இதில் 821 காளைகளும் 360 மாடுபிடிவீரர்களும் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடு பிடி வீரர்கள், 24 மாடு உரிமையாளர்கள், 14 பார்வையாளர்கள், 2 காவலர்கள் என 53 பேர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: உதயநிதி, அழகிரி சந்திப்பால் பாலாறும், தேனாறும் ஓடப்போகிறதா? செல்லூர் ராஜூ கலாய்

Tap to resize

Latest Videos

undefined

காலை முதல் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து 20 காளைகளை அடக்கிய ஏனாதியை சேர்ந்த அஜய் 2வது இடமும் 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் 3ம் இடமும் பெற்றனர். இதை அடுத்து முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பார்வையாளர்கள், காவல்துறை இடையே தள்ளு முள்ளு; பாதியில் நிறுத்தப்பட்ட மஞ்சுவிரட்டு

2ம் இடம் பிடித்த அஜய்க்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில், சுற்றுக்கு 100 காளைகள் என்ற வீதம் களமிறக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்கக்காசு, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, பீரோ, சைக்கிள் என பரிசுகள் வழங்கப்பட்டன. 

click me!