தடுப்பு சுவற்றை தாண்டி பறந்து சென்ற கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி

By Velmurugan sFirst Published Jul 31, 2023, 9:30 AM IST
Highlights

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் சாலை தடுப்புச் சுவரை தாண்டி பறந்து சென்ற கார்  கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் விரகனூர் ஊராட்சி, நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). கன்டெய்னர் லாரி ஓட்டுநரான இவர், மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி மையிட்டான்பட்டி விலக்கு அருகே கன்டெய்னர் லாரியில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர் பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி பறந்து சென்று எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மதுரை சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரியால் கோர விபத்து; ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் காரில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் மேக்காடு அருகே தெங்கன்குளிவிளையைச் சேர்ந்த சாம்டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற கள்ளிக்குடி காவல் துறையினர் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உல்லாசத்துக்கு அழைத்த தம்பி மகன்.. இணங்க மறுத்த அத்தையை போட்டுத்தள்ளிய சம்பவம் - சென்னையில் அதிர்ச்சி

மேலும்., இறந்தவர்கள் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் தடுப்பை தாண்டி கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!