50,000 ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து வாக்கு சேகரிப்பு! கரூர் பாஜக வேட்பாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

By vinoth kumar  |  First Published Mar 31, 2024, 11:38 AM IST

 திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்?


வேடசந்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது 50,000 ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசிய திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்?

Latest Videos

இதையும் படிங்க: திமுக கடவுளை திட்டிக்கிட்டே சாமி கும்பிடும்! பாஜக கடவுளே திட்ற அளவிற்கு சாமி கும்பிடும்! பங்கம் செய்த விந்தியா

உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? எத்தனை குறைகளை நிறைவேற்றினார்? என்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வந்து எத்தனை பேர் கூறினாலும், அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கிறார். அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுண்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டிக்காண்பித்து பேசினார்.

இதையும் படிங்க: பிரதமர் கியாரண்டி பிரசாரத்திற்கு கிடைத்த வரவேற்பு! முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு! வானதி சீனிவாசன்!

இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன், உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!