காங்கேயம் அருகே நடந்த இரு வேறு விபத்துகளில் 3 பேர் பலி, 3 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Aug 1, 2023, 11:48 AM IST

கரூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(வயது 45). திருமணமான இவர் தனது மனைவி ராமா(42) மற்றும் 2 மகன்கள் கிரண்குமார்(12), பரணிகுமார்(10) ஆகியோருடன் வசித்து வந்தனர். கேசவன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 2 மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். 

இந்த நிலையில் கேசவன் தனது குடும்பத்துடன் தஞ்சாவூரில் உள்ள தனது குல தெய்வ கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்துள்ளார். அதன்படி கேசவன் அவரது மனைவி ராமா, 2 மகன்கள் கிரண்குமார், பரணிகுமார் மற்றும் இவரது உறவினர்கள் ஜனார்த்தனன்(60), முகுந்தன்(52) ஆகிய 6 பேர் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

தந்தையின் அஜாக்கிரதையால் தீக்குளியில் விழுந்த 1 வயது குழந்தை கவலைக்கிடம்; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
  
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு நோக்கி காங்கேயம் வழியாக ஒரு காரில் அனைவரும் வந்துள்ளனர். காரை கேசவன் ஓட்டி வந்தார். ஜனார்த்தனன்  ஓட்டுநரின் இடதுபுறம் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று காங்கேயம், திருப்பூர் சாலை, படியூர் அடுத்த தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில், முன்பக்கம் அமர்ந்திருந்த ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பரணிகுமாரும் உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.
 
இதே போன்று காங்கேயம் நகரம், சிவசக்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா(44). திருமணமான இவர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் செந்தில்ராஜா காலை காங்கேயம் - கோவை சாலை அகத்திலிங்கம்பாளையம் பிரிவு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது காங்கேயத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து செந்தில்ராஜா சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் செந்தில்ராஜாவுக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

பிளாஸ்டிக் கவருடன் கொதிக்க வைக்கப்பட்ட சாம்பார், ஈக்கள் மொய்த்த கறி - உணவக உரிமையாளரை அலறவிட்ட அதிகாரிகள்
  
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த செந்தில்ராஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சூலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காங்கேயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயம் பகுதிகளில் இன்று நடந்த இருவேறு விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!