மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்திற்கான கயிற்றினை கிறிஸ்தவர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் பூசாரிகளிடம் வழங்கினர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 10 ஆம் நாள் திருத்தேரோட்டமும் 11ஆம் நாள் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் கொடியேற்றத்திற்கான கயிற்றினை கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மக்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி இரட்சகர் தெருவைச் சார்ந்த கைலியார் என்ற கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கடந்த ஆறு தலைமுறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வைகாசி திருவிழாவின் போது கொடியேற்றத்திற்கான கயிற்றினை வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு வைகாசி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகின்ற நிலையில் நேற்றிரவு இரவு கைலியா குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கொடியேற்றத்திற்கான கயிற்றினை மேளதாளங்கள் முழங்க தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு கோவில் மேலாளர் ஆனந்திடம் அவர்கள் கொடிக் கயிற்றினை வழங்கினர்.