கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் அருகே கோயில் தெப்பக்குளத்தில் இருந்து சுமார் 1-அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன அம்மன் சிலை கண்டெடுப்பு சிலை குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகிஷாசுர மர்தனி திருக்கோயில். தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழாவும் அடுத்த மாதம் 2-அம்மன் ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
undefined
இதற்காக கோவில் தெப்பக்குளம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர் வாரும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்த போது அந்த குளத்தின் சகதிகளுக்கிடையே இருந்து சுமார் 1-அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன அம்மன் சிலையை கண்டெடுத்தனர். அந்த சிலையை ஊழியர்கள் இந்து சமய அறநிலையத்துறை பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் சண்முகத்திடம் ஒப்படைத்தனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கம்; வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு - மக்கள் வேதனை
இதனையடுத்து சிலையை கோயில் அறையில் பாதுகாப்பாக வைத்த அதிகாரிகள் சிலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.