மதுபோதையில் தகராறு செய்த ராணுவ வீரர்; கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த இளைஞர்கள்

Published : May 22, 2023, 11:53 AM IST
மதுபோதையில் தகராறு செய்த ராணுவ வீரர்; கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த இளைஞர்கள்

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் மதுபோதையில் சாலையில் சென்றவர்களிடம் தகராறு செய்த ராணுவவீரரை கம்பியில் கட்டிவைத்து இளைஞர்கள் சிலர் தாக்கிய நிலையில் ராணுவ வீரரை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதன் காரணமாக அவ்வபோது மதுபிரியர்களின் அட்டகாசங்கள் ஆற்றூர் சந்திப்பில் அரங்கேறுவது வழக்கம். இந்நிலையில் திருவட்டாரை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் ராணுவவீரரான ரெதீஷ்குமார். இவர் ஆற்றூரில் இயங்கிவரும் மதுகடைக்கு சென்று மது அருந்திவிட்டு தள்ளாடியபடி ஆற்றூர் சந்திப்பில் சாலையில் சென்றவர்களிடம் தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருந்த ராணுவவீரர் ரதீஷ்குமாரை  கீழே தள்ளிவிட்டு மிதித்ததோடு மட்டுமல்லாமல் மனிதாபமின்றி அப்பகுதியிலிள்ள இரும்பு கம்பத்தில் கட்டிவைத்தும் தாக்கியுள்ளனர். இதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதமாக வந்த திருவட்டார் காவல்துறையினர் கம்பத்தில் கட்டபட்டு ரத்தகாயங்களுடன் கிடந்த ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கணவன், மனைவி பிரச்சினையில் குறுக்கே வந்த மாமியாருக்கு கத்திகுத்து

தொடர்ந்து ராணுவவீரர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய இளைஞர்களை தேடிவருகின்றனர். பட்டபகலில் மதுபோதையில் சாலையில் தகராறு செய்த ராணுவவீரரை இளைஞர்கள் சிலர் தாக்கியது கண்ட பொதுமக்கள் சிலர் தடுத்ததால் இளைஞர்கள் அந்த ராணுவவீரரை உயிரோடு விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. 

திமுக பிரமுகர் கொலை? புதுக்கோட்டையில் 3 நாட்களாக தொடரும் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?