கனிமவள கடத்தல் நடப்பதாகச் சொல்லப்படும் களியக்காவிளை சோதனை சாவடிக்கு நள்ளிரவில் வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் கண்காணிப்புக் காவலர்களை தொலைத்துக் கட்டிவிடுவேன் என்று எச்சரித்தார்.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடிக்கு நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து தினமும் இரவு நேரத்தில் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் அந்த வாகனங்கள் குமரி மாவட்ட சோதனை சாவடி வழியாக கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு 244 முறை இயக்கப்படும் 50 சிறப்பு ரயில்கள்
இந்தக் கனிம வள கடத்தலுக்கு சோதனை சாவடி பணியில் இருக்கும் காவலர்கள் உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் தான் இதற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு களியக்காவிளை சோதனை சாவடிக்கு வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்கு வந்தபோது பல கனரக வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து சென்றதை கண்டதால், பணியில் இருந்த காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கினார்.
காவலர்களை நோக்கி கண்டிப்புடன் பேசிய அமைச்சர், தொலைத்து கட்டிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். அமைச்சரின் இந்த திடீர் விசிட் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் தகவல் பரவியதால் களியக்காவிளை நோக்கி வர இருந்த பல கனரக வாகனங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.அவை பின்னர் காலையில் சாரை சாரையாக சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுவிட்டன. அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பார்ம், ஐடி கார்டு ஏதும் தேவை இல்லை: ஸ்டேட் வங்கி அறிவிப்பு