Crime News : மூதாட்டியின் போட்டோசை மார்ஃபிங் செய்து மிரட்டிய குமரி இளைஞர் கைது!

By Dinesh TG  |  First Published May 20, 2023, 12:55 PM IST

பெங்களுர் மூதாட்டியிடம் முகநூலில் பழகி அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக மிரட்டி பணம் பறித்த கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்சினியரை கார்நாடக போலீசார் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள், மெக்கானிக்கல் இஞ்சினியரான இவருக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஷபிதா நாயக் என்ற 60-வயதான மூதாட்டியிடம் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது

இதில் ஒருவருக்கொருவர் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் அருள் அந்த மூதாட்டியிடம் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போவதாக மிரட்டி கூகுள் பே மூலம் 12-ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்

அடுத்தப்படியாக மார்பிங் செய்த புகைப்படங்களை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி கூடுதலாக 50-ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறதது. இதனால் மனமுடைந்த ஷபிதா நாயக் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது



இது குறித்து புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் புத்தூர் காவல் நிலையத்தில் பெண்மைக்கு களங்கம் விளைவித்தல், பெண்ணை மிரட்டி பணம் பறித்தல் உட்பட 5-பிரிவுகன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்

நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதிக்கு வந்த கர்நாடக போலீசார், இரணியல் உள்ளூர் போலீசார் உதவியுடன் அருஐ கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றனர்.

Tap to resize

Latest Videos

click me!