Watch : குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் ஆய்வு! முறையற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு!

By Dinesh TGFirst Published May 17, 2023, 4:46 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினர், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். முதற்கட்டமாக 300 க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள், இருக்கை வசதிகள் போன்றவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கபட்டது.

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது. இந்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு வாகனத்திலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் பொறுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களில் தீயனைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என்று ஒவ்வெரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும். வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும்
கேமரா பொறுத்த வேண்டும். ஆனால் கேமரா மற்றும் சென்சார் பொறுத்தப்படாமல் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயனைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மாணவ- மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாகனத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு சில வாகனங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

click me!