இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள்; சுற்றி வளைத்து கைது செய்த அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published May 23, 2023, 6:07 PM IST

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களை கைது செய்த கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் 90 நாட்டிக்கல் மைல் தொலைவில் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த விசைப்படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

பின்னர் கடலோர பாதுகாப்பு படையினர் அத்துமீறி நுழைந்த படகில் இறங்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 17ம் தேதி மீன் பிடிக்க வந்ததாகவும், படகில் நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெனில், விக்டர் இமானுவேல், ஆண்டனி ஜெயராஜா, ரஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய ஐந்து மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து படகு மற்றும் ஐந்து மீனவர்களையும் கடலோர பாதுகாப்பு படையினர் தருவைகுளம் கடற் பகுதிக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

கன்னியாகுமரியில் கோவில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை; அதிகாரிகள் விசாரணை

கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் இந்திய கடல் எல்லையில்  அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்ததுடன் படகு மற்றும் படகில் இருந்த 150 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் மத்திய உளவு பிரிவு, கியூ பிரிவு அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் ஆகியோர் இலங்கையை சேர்ந்த ஐந்து பேரும் மீன்பிடிக்க தான் வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தலில் ஈடுபட வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பெண் காவலர்கள்

click me!