குமரியில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் கழுகு பார்வை காட்சி

By Velmurugan s  |  First Published Feb 8, 2023, 11:56 AM IST

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரசாயனம் பூசும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், புதுப்பொலிவுடன் காணப்படும் வள்ளுவர் சிலையின் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள கன்னியாகுமரியில் கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால்  கடல் நடுவில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. வள்ளுவர் சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரசாயன கலவை பூசும் பணி  நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

அதன் பிறகு  காகித கூழ் கலவை  சிலை மீது ஒட்டப்பட்டு  சிலையில் படிந்துள்ள உப்பினை எடுக்கும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்த பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் இரசாயன கலவை பூசப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்ட  இரும்பு சாரம் பிரிக்கப்பட்டு படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்

திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி முடிவுற்ற நிலையில் தற்போது இங்கு  சுற்றுலா  பயணிகள் காத்திருப்பு கூடத்தினை சீரமைக்கும் பணி, மின் விளக்குகள் சரி செய்யும் பணி, சிலையின் தரை தளம் சீரமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவுற்ற பின்னர் மீண்டும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை; அதிகாரிகளை அலறவிட்ட விவசாயி

click me!