குமரியில் தன்னை பிடிக்க வந்தவர்களை படமெடுத்து அச்சுறுத்திய ராஜநாகம்

By Velmurugan s  |  First Published Feb 3, 2023, 12:37 PM IST

தன்னை பிடிக்க வந்த தீயணைப்பு வீரர்களை ராஜநாகம் ஒன்று படமெடுத்து பயமுறுத்தியது. இருந்தாலும் லாவகமாக தீயணைப்பு வீரர்கள் பிடித்துச் சென்றனர். 


கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் இருள் சூழ்ந்த இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை ஒருவர் கேட்டார். உடனே அந்த இடத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் கொல்லங்கோடு தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் உபகரணங்களைக் கொண்டு பாம்பு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதனால் அச்சமடைந்த பாம்பு தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக தன்னை பிடிக்க வந்தவர்களைப் பார்த்து படமெடுத்து பயமுறுத்தியது. 

Latest Videos

தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன், பள்ளி மாணவி ரயில் மோதி பலி

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் அந்த ராஜநாகத்தை பிடித்து சாக்குப் பையில் அடைத்து எடுத்துச் சென்றனர். இரவென்றும் பாராமல் தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்து பாம்பை பிடித்து சென்ற தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாரட்டியதுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவி!! 

click me!