
கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பனி மூட்டம் மற்றும் பலத்த சூறை காற்று வீசி வந்த நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களைச் சேர்ந்த பெரும்பாலான பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி, 15 தொழிலாளர்கள் காயம்
தொடர்ந்து சூறைக்காற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த விசைப்படகு மீனவர்கள் ஒட்டு மொத்தமாக மீன்பிடி தொழிலை கைவிட்டு கரை திரும்பி வந்தனர். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
Video: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து நிலையத்திலேயே உயிரிழந்த மூதாட்டி
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்ததோடு கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.