மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ்; வியந்து பார்த்த அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published Feb 3, 2023, 1:57 PM IST

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து சிலம்பம் விளையாடி அசத்தினார்.


மறைந்த முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மையங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டியினை துவக்கி வைப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தார். 

Latest Videos

போட்டிகளை துவக்கி வைக்கும் முன்னர் அவர் ஏற்கனவே சிலம்ப கலையில் அதிகம் ஈடுபாடு  உள்ளவர் என்பதால் மைதானத்தில் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்தினார். இதனை அடுத்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ, மாணவர்களிடையே உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

பேரறிஞர் அண்ணாவுக்கு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்

இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாக சென்று அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். அதே போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் அமைதி பேரணி சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

குமரியில் தன்னை பிடிக்க வந்தவர்களை படமெடுத்து அச்சுறுத்திய ராஜநாகம்

click me!