டாஸ்மாக் கடைகள் அதிரடியாக இழுத்து மூடல் !! குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாட்டம் ....

Published : Aug 16, 2019, 01:36 PM ISTUpdated : Aug 16, 2019, 01:38 PM IST
டாஸ்மாக் கடைகள் அதிரடியாக இழுத்து மூடல் !! குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாட்டம் ....

சுருக்கம்

குமரி மாவட்டத்தில்  டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருவதால் குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் திணறி வருகின்றனர் .

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மதுபான கடை விற்பனையாளராக இருந்தவர் ராஜா . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் . இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர் .

இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது . எனினும் இன்னும் கொலையாளிகள் கண்டுபிடிக்கபட வில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் .

அதன்படி மாவட்டத்தில் இருக்கும் 93 கடைகளையும் அடைத்த ஊழியர்கள் , கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர் . மேலும் மதுபான கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் .

டாஸ்மாக் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர் .

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?