மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..!

By vinoth kumar  |  First Published Aug 7, 2019, 6:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட். இவர் கருங்கல் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கருங்கல் சுண்டவிளையில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சென்ற ராபர்ட் மின்மாற்றியின் மின் இணைப்பை கவனக்குறைவு காரணமாக சரியாக துண்டிக்காமல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரியில் மின்மாற்றியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கிய பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட். இவர் கருங்கல் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கருங்கல் சுண்டவிளையில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சென்ற ராபர்ட் மின்மாற்றியின் மின் இணைப்பை கவனக்குறைவு காரணமாக சரியாக துண்டிக்காமல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Latest Videos

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் ராபர்ட் மின்மாற்றியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  ராபர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!