கன்னியாகுமரி கடலில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடமான கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
கடலில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
தமிழகம் எங்கும் கடலோர பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .