பீகாரை விட தமிழகம் பின்தங்கி உள்ளதா? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தைரியம் உள்ளதா என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தாலுக்காவுக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகளை துவங்கி வைத்த தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குழித்துறை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
undefined
பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் படி பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், அண்ணாமலைக்கு தையிரியம் இருந்தால் மக்கள் பொருளாதார முன்னேற்ற அறிக்கையை வைத்து தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்க தையிரியம் உள்ளதா என்று கேளுங்குகள் நான் தயாராக உள்ளேன்.
மனித வள மேம்பாட்டு குறியிட்டில் தமிழகத்தை ஒப்பிட பாஜக ஆளும் மாநிலத்திற்கு தகுதி இல்லை. குமரியில் மீனவ மக்களின் கோரிக்கையை மதிக்கிறேன். எல்லோரும் அவர்கள் பிரதிநிதிகள் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். தேர்தல் என்பது மதத்தை வைத்து நடைபெறுவது அல்ல. அது தேசத்தின் நலம் சார்ந்து நடக்க கூடிய ஒன்று.
அதிமுக கூட்டணியில் தமாகா? எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பால் அதிர்ச்சியில் பாஜக?
அந்த வகையில் பார்க்கும் போது இந்தியாவின் ஒட்டு மொத்த சவாலாக வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்பது தான் படித்த மாவட்ட மக்களின் ஒரே இலக்காக உள்ளது. இந்திய கூட்டணி வேட்பாளர் 100 சதவிகிதம் வெற்றி பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.