நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகை தனியார் மருத்துவக் கல்லூரி . மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெண் மருத்துவர் சுகிர்தா அங்குள்ள மருத்துவர்களின் பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோன்று நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அரசு அரசு மருத்துவர் ஒருவர் பெண் மருத்துவரக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இன்றும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
undefined
நாகர்கோவில் அருகே உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து முடித்து தற்போது 2ம் ஆண்டு பணி பயிற்சி பெற்று வரும் திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பாரதி தெருவை சேர்ந்த 19 வயது மாணவி மருத்துவமனை விடுதியில் உள்ள கழிவறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி விழாவில் தனது நண்பனை நினைவுகூர்ந்து தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
மேலும் காவல் துறையினர் வருவதற்கு முன்பே அவசரம் அவசரமாக மருத்துவமனை ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக மாணவியின் சகோதரர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.