ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல சட்டம் அனுமதிக்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே இது நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறுகையில், நாட்டின் ஜனநாயகத்தின் மீதுதோ, மதசார்பற்ற தன்மை மீதோ, அனைவரும் சமம் என்ற தத்துவத்தின் மீதோ ஒன்றிய அரசு கை வைக்க நினைத்தால் திமுக அனுமதிக்காது என தலைவர் கூறியுள்ளார். இதுவே மாநிலத்தின் நிலைபாடு.
அதிமுக என்பது ஒரு கொள்கை ரீதியிலான கட்சி கிடையாது. கொள்கை என்பது நிரந்தரமாக இருப்பது. ஒருமுறை CAA வை கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருமுறை வாக்குக்காக இப்படி பேசுவார்கள். சீமான் என்னை பால்வியாபாரி என தான் கூறினார். அவரை போன்று தோல் வியாபாரி என கூறவில்லையே.
17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கட்டாய உடலுறவில் ஈடுபட்ட சித்தப்பா போக்சோவில் கைது
அதிகனரக வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த குழுக்கள் சட்டவிரோதமாக அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.
காட்டு யானையுடன் செல்பி; சுற்றுலா பயணியை தலைதெறிக்க ஓடவிட்ட ஒற்றை யானை - கேரளாவில் பரபரப்பு
ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கனிம வளம் கொண்டு செல்வதை ஒன்றிய அரசின் சட்டம் அனுமதித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது கனிமவளம் கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே போராட்டம் செய்த பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசை எதிர்த்து பேச திரானியில்லாமல் பொய்யான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றார்.