காதலனை விட மனமில்லாத மாணவி; உப்பு மீது முட்டி போட வைத்து சித்ரவதை செய்த தாய் - போலீசார் கண்டிப்பு

By Velmurugan s  |  First Published Nov 17, 2023, 11:24 PM IST

கன்னியாகுமரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் தனது மகளை உப்பில் முட்டி போட வைத்தும், அடித்தும் சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா. இவரது மகள் அமர்ஷியா (வயது 19). இவர் தனியார் கலை கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு கல்லூரி மாணவி அமர்ஷியாவை வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று விட்டதாகவும், மகளின் காதலன் அடியாட்களை அனுப்பி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் மாணவியின் தாயார் சுனிதா குளச்சல் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி 19-வயதான கல்லூரி மாணவி அமர்ஷியாவும், அதே பகுதியை சேர்ந்த 21-வயதான டிப்பிளமோ பட்டதாரியான டேனியல் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததுள்ளனர். இருவரும் செல்போணில் மாறி மாறி வாட்ஸ் ஆப் சேட்டிங் செய்து காதலை வளர்த்து வந்த நிலையில் அடிக்கடி தனியாக ஊர் சுற்றியும் வந்துள்ளனர்.

புதுவையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பக்கோடா சுட்டு விற்று நூதன  போராட்டம்

இந்த தகவல் மாணவி அமர்ஷியாவின் பெற்றோர் கவனத்திற்கு வந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை செல்போண் சேட்டிங் மூலம் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் சுனிதா அமர்ஷியாவை தனி அறையில் அடைத்து தரையில் உப்பை பரப்பி அதன் மீது முட்டி போட வைத்தும், அடித்தும் துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புதன்கிழமை மாலையிலும் அதே நிலை தொடர்ந்ததால் மனமுடைந்த மாணவி அமர்ஷியா தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தப்பியோடி காதலன் டேனியல் ஆகாஷ் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்த தகவலை காதலனின் பெற்றோர் மாணவியின் தாயார் சுனிதாவிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கவே அங்கு சென்றும் மாணவியை தாக்கியுள்ளனர். மேலும் கடத்தல் நாடகமாடி காவல் நிலையத்தில் புகாரளித்ததும் தெரியவந்தது.

இனியாவது திமுக தனது தவறை உணரும் என நம்புகிறோம் - விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

இதனையடுத்து மகளை கடத்தியதாக பொய் புகாரளித்த தாயார் சுனிதாவை கண்டித்து எச்சரித்த போலீசார் கல்லூரி மாணவி மேஜர் என்பதால் அவர் விருப்பபடியே அனுப்பி வைக்க முடியும் என கூறி இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கியதோடு கல்லூரி மாணவியை பதிவு திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி காதலனுடன் அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை தாயே உப்பு மீது முட்டி போட வைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!