கருணாநிதி நூற்றாண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணம் தொடங்கியது. இந்த நிகழ்வில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல், திரைத்துறை, சமூகநீதி பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், திமுகவின் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் குழு சார்பில் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை இன்று (04. 11. 2023) கன்னியாகுமரி, காந்திமண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. வரவேற்றுப்பேசினார். எழுத்தாளர் கலைஞர் குழு உறுப்பினர் செயலர் மற்றும் சமூகநலத்துறை ஆணையர் வே. அமுதவல்லி. இ. ஆ. ப நன்றியுரை ஆற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம். இ. கா. ப. , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயதாரணி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜே. பாலசுப்பிரமணியம், நகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன். இ. ஆ. ப. , உட்பட பள்ளி மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா