நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தையை கடத்த முயற்சி; போலீசார் விசாரணை

By Velmurugan s  |  First Published Nov 2, 2023, 5:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 3 வயது பெண் குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்த முயற்சி. கடத்த முயன்ற போது குழந்தை கூச்சலிட்டதால் மர்ம நபர் தப்பி ஓட்டம். 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் சுபாஷினி தம்பதியினர். இவர்களுக்கு மகிழினி என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் 3 வயது பெண் குழந்தை மகிழினி மற்றும் அவரின் தாய் சுபாஷினிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Latest Videos

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.40 மணியளவில் தோளில் பையை போட்டுக்கொண்டு மர்ம நபர் ஒருவர் சுபாஷினி தங்கி இருந்த அறைக்குள் சென்றுள்ளார். அப்போது சுபாஷினியின் தாயாரும் அங்கே இருந்து உள்ளார். அரையில் சென்ற மர்ம நபர் சத்தம் கேட்கக் கூடாது என தனது செருப்பை கழற்றிவிட்டு குழந்தை மகிழினியை கடத்த முயற்சி செய்து உள்ளார். 

வாக்காளர் பட்டியலில் குளறுபடி; கள்ள ஓட்டு போட திமுகவினர் தயாராக உள்ளனர் - விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆனால் குழந்தை திடீரென சத்தம் போடவே சுபாஷினியின் தாயாரும் உடனடியாக விழித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபரை பிடிப்பதற்கு முன்னதாக அறையில் இருந்து தப்பி ஓடி விட்டார். நள்ளிரவில் மூன்று வயது குழந்தையை தனியார் மருத்துவமனையில் இருந்து கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் புகுந்து மூன்று வயது குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!