கன்னியாகுமரியில் திடீரென குறுக்கே பாய்ந்த நாயால் போலீஸ் ஏட்டு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியா குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பெனடிக்ட் (வயது 40). இவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஷிபா(34) என்ற மனைவியும், 9 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 4-ம் தேதி பகல் நேரத்தில் பெனடிக்ட் ஊரம்பில் இருந்து நடைக்காவு பகுதி வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். நடைக்காவு அடுத்த அருவுபொற்றை பகுதியில் சென்றபோது ஒரு நாய் திடீரென குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது பெனடிக்ட் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் ஓடையில் தூக்கி வீசப்பட்டார்.
பிரசாரத்தின் போது திடீரென புரோட்டா மாஸ்டராக அவதாரம் எடுத்த திமுக மேயர்
இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பெனடிக்ட் பரிதாபமாக இறந்தார்.
அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட விசைத்தறி நெசவாளரை வேட்பாளர் இருக்கும்போதே தாக்கிய பாஜகவினர்
இதுகுறித்து பெனடிக்ட்டின் மனைவி ஷிபா கொல்லங்கோடு காவல் நிலையத்தில் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.