குமரியில் புதிய நவீன சொகுசுப் படகு சவாரி! - பச்சைகொடி காட்டி துவைகி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு!

By Dinesh TGFirst Published May 24, 2023, 2:05 PM IST
Highlights

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்கீழ் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய நவீன சொகுசு படகு சவாரியினை, அமைச்சர் எ.வ.வேறு, பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய நவீன சொகுசு படகு சவாரியினை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

click me!