கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பட பச்சை பகுதியில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அரசு நிபந்தனையை மீறி அதிகாலை முதலே வியாபாரம் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மது அருந்தியுள்ளனர். பின்னர், போக்குவரத்து வீதிகளை மீறி மது அருந்திவிட்டு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பட பச்சை பகுதியில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அரசு நிபந்தனையை மீறி அதிகாலை முதலே வியாபாரம் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மது அருந்தியுள்ளனர். பின்னர், போக்குவரத்து வீதிகளை மீறி மது அருந்திவிட்டு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது சாலையில் எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேஷ், விஜயன், பால்ராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுகிறது.