கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த லூலு கிருஷ்ணா, பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றதால், லூலு கிருஷ்ணா பெற்றோருடன் வசித்து வந்தார்.
கன்னியாகுமரி அருகே திருமணமான 9 மாதங்களில் அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த லூலு கிருஷ்ணா, பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்புக்காக அகமதாபாத் சென்றதால், லூலு கிருஷ்ணா பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் லாலு கிருஷ்ணா பேசிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, லாலு கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருத்துவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.