தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தி வாக்காளர்கள் ஒரே நேரத்தில் 4 வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். பொதுவாக நகர்புறங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பிற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குபெட்டி-வாக்குசீட்டு முறையே இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் அனைத்து பதவிகளுக்கும் இந்த தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தலுக்கு, பல பதவி ஒரு தேர்வு (மல்டி போஸ்ட் சிங்கிள் சாய்ஸ்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தை தேர்ந்தெடுக்க நிர்வாக ரீதியில் ஒரே ஒன்றியத்திற்குள் உள்ளாட்சி பதவிகள் வருகிறது. மேலும் மக்களுடைய பங்களிப்பு, அலுவலர்கள் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு காரணங்களை ஆய்வு செய்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிற சீட்டில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரமும், ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிற சீட்டு பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரமும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிற சீட்டு பொருத்தப்பட்ட இயந்திரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிற சீட்டு பொருத்தப்பட்ட இயந்திரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வாக்குப்பதிவு செய்தவுடன் பீப் சத்தம் கேட்டு, அதில் எரியும் பச்சை விளக்கு அணையும். அவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 4-வது இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தவுடன் நீண்ட பீப் சத்தம் கேட்கும். அப்போது தான் ஒரு வாக்காளர் முழுமையாக வாக்குப்பதிவு செய்து முடித்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் நோட்டா இடம்பெறுவது இல்லை. இந்த நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஓரே கட்டுப்பாட்டு கருவியுடன் இணைக்கப்பட்டு, பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அதே கருவியில் சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேல்புரம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அமைதியான முறையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.