கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமர் என்ற சரக்கு வாகன டிரைவர் ஆன்லைனில் லோன் வாங்கி பாதிக்கப்பட்டது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக கடன் வாங்குகிறார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் லோன் செயலிகள் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான சலுகைகள், தள்ளுபடிகள் என அறிவித்து கடன் வாங்குபவர்களைக் கவர்ந்து இழுக்கின்றனர்.
கடன் கொடுத்த பின் வாடிக்கையாளர்களுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வசூல் வேட்டை நடத்துகின்றனர். வட்டியைக் கட்டத் தவறினால் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தும், மிரட்டல் விடுத்தம் பணத்தைக் கறந்து வருகின்றனர். அச்சுறுத்தலுக்கு பயந்து பணத்தைக் கட்டும் மக்கள் தங்கள் உடமைகளையும் இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்னர்.
undefined
கோடையில் வண்ணமயமாக ஜொலிக்கும் செவ்வாய் கிரகம்! நாசா விண்கலம் எடுத்த கண்கவர் புகைப்படங்கள்!
இந்த ஆன்லைட் லோன் செயலிகளை நம்ப வேண்டாம் என்று அரசும் காவல்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத சாமானிய மக்கள் ஆன்லைன் லோன் செயலிகளின் வலையில் சிக்கி, பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆன்லைன் செயலியில் கடன் பெற்று அதிக வட்டி கட்டி மோசம் போன இளைஞர் ஒருவர் தன் சோகக் கதையைச் சொல்லிப் புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார். "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று நடிகர் விவேக் பேசும் டயலாக்கைப் பேசி விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார்.
ட்வீட்களில் ஆபாசம், அவதூறு... பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வீடியோவில் உள்ள நபர்னக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில் தன் கதையைப் பாட்டாகப் பாடும் அவர், ஆன்லைனில் லோன் எடுத்து அதிக வட்டி கொடுத்து வந்ததாவும், இப்போது அது தனது குரல்வளையை நசுக்குவதாவும் சொல்கிறார்.
'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..' பாடலின் மெட்டில், "ஆன்லைன் லோனில் வட்டி ரொம்ப அதிகம்... வட்டி என்ற பேரில் என் ஜட்டி வரை உருவிட்டான்... ஆன்லைன் லோனில் மாட்டிக்காதிங்க" என்று பாடி விழிப்பணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார். சோகத்தை மறைத்து சிரித்துப்போது போல காட்டுக்கொண்டு தன் பாடலை முடிக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி, வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த 10 ரூபாய் மிச்சம்... இனி டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில்! களமிறங்கும் ரயில்டெல்!