ட்வீட்களில் ஆபாசம், அவதூறு... பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சமூக வலைத்தளங்களில்  ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்காக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் உமா கார்க்கிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

Coimbatore court dismissed BJP supporter Uma Karki bail petition

பாஜக ஆதரவாளரான உமா கார்க்கி என்ற உமா கார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிட்டு வந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அளித்த புகார்களின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்க்கி ஜாமீன் கோரி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரசுக்குத் தாவிய 12 முன்னாள் அமைச்சர்கள்! தெலுங்கானாவில் கேசிஆர் கட்சிக்குப் பின்னடைவு

Coimbatore court dismissed BJP supporter Uma Karki bail petition

கோவையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டார் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுவைச் சேர்ந்த ஹரிஷ் ஜூன் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல, நடிகர் விஜய் பற்றி ஆபாசமாகப் பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் எதிரொலியாக உமாவை ஜூன் 24ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வெறும் கையால் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்! மதுரை ரயில் நிலையத்தில் அவலம்!

Coimbatore court dismissed BJP supporter Uma Karki bail petition

இதனையடுத்து, கோவை காவல் நிலையத்தில் திமுக ஐடி பிரிவைச் சேர்ந்த ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உமா கார்க்கி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று காவல்துறை மறுப்பு தெரிவித்தது. அதன்படி, கோவை நீதிமன்றம் உமா கார்க்கியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

பென்ஷன் தொகையை அதிகரிக்க மற்றொரு வாய்ப்பு! காலக்கெடுவை நீட்டித்து EPFO அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios