பாலியல் பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்

By Velmurugan s  |  First Published Mar 27, 2023, 9:36 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பங்கு தந்தை பெனிடிக்ட் ஆன்றோ பெயரில் ரசிகர் மன்றம் உருவாக்கி திருமண வாழ்த்து பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த பெனிடிக்ட் ஆன்றோ என்ற பங்குதந்தை ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி காவல் துறையினரால் கைது செய்து செய்யப்பட்டார். கன்னியாகுமரி சிறையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று பாதிரியார் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் மகளின் திருமணத்திற்கு மாவு அரைத்த போது நேர்ந்த சோகம்; திருமண வீட்டில் ஒப்பாரி வைத்த உறவினர்கள்

Latest Videos

இந்நிலையில், சிறையில் இருக்கும் பாதிரியாரின் புகைப்படத்தை பயன்படுத்தி குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் பல்வேறு மீம்ஸ்களை தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பெரம்பலூரில் பயங்கர விபத்து; ஒருவர் பலி 8 பேர் படுகாயம்

அந்த வகையில், மீம்ஸ்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்குதந்தை பெனடிக்ட் ஆன்றோ பெயரில் ரசிகர்  மன்றம் துவங்கி வடிவேலு, சந்தானம் பட காமெடிகளை திருமண வாழ்த்து பேனரில் வைத்து வீட்டின் முன்பு வைத்துள்ளனர். இதனை திருமண வீட்டிற்கு வரும் மக்கள் வித்தியாசமான முறையில் பார்த்து செல்கின்றனர். தற்போது இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

click me!