திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் - ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பார்வதிபுரம் பகுதியை கடக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் - ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பார்வதிபுரம் பகுதியை கடக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதையும் படிங்க: பகல் நேரங்களில் வாட்டி வதைக்கும் வெயில்... சென்னை வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
இந்த சத்தத்தை உணர்ந்த ரயில்வே ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்த்தினார். இதனையடுத்து தண்டவாளத்தில் இறங்கி பார்த்த போது தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடும் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து ரயில் ஓட்டுநர் அருகே உள்ள கேட்கீப்பரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "திரிஷா மாதிரின்னு தான் சொன்னார்" - அந்தர் பல்டி அடித்து சர்ச்சை பேசுக்கு மன்னிப்பு கேட்ட ஏ.வி. ராஜு!
இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.