அமைச்சர் வீட்டருகே தீப்பற்றிய கார்... கோவையை தொடர்ந்து குமரியிலும் உச்சக்கட்ட பரபரப்பு!!

By Narendran SFirst Published Oct 25, 2022, 8:28 PM IST
Highlights

கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: சூரிய கிரகணத்தின் போது சாப்பிட கூடாதா? மூடநம்பிக்கையை ஒழிக்க சிற்றுண்டி ஏற்பாடு செய்த திராவிடர் கழகம்!!

மேலும் இந்த சம்பவம் குறித்து 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதேபோன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!!

அங்கு ஆசிம் என்பவர் கார் ஓட்டி வந்து கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் இருந்து புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார் பற்றி எரிந்து உள்ளது. இதைக்கண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவி உள்ளது.

click me!