கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஜான்சிலா(21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்துவந்தார்.
சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததை நினைத்து மனஉளைச்சலில் இருந்து வந்த காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஜான்சிலா(21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்துவந்தார். மகள் தன் வீட்டு குளியல் அறையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து பெற்றோர் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்க நினைத்து ஓயாமல் பாலியல் சீண்டல்! வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து மருமகன் கொலை!தாலியை அறுத்த மகள்
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சகாய ஜான்சிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவி சகாய ஜான்சிலா இளைஞரை ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்து அந்தத இளைஞர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்த ஐடெக் விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு! சிக்கிய 19 வயது இளம்பெண் புரோக்கர்!
அப்போதில் இருந்தே மீளமுடியாத மனவேதனையில் இருந்துள்ளார். யாரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில், சகாய ஜான்சிலா தற்கொலை செய்தது தெரியவந்தது. காதலன் இறந்த துக்கத்தில் காதலி உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.