லெக்கின்ஸ் அணிய தடை? அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு? மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

By vinoth kumar  |  First Published Nov 23, 2023, 2:37 PM IST

ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ் பேன்ட், டிராக் சூட் பேன்ட் போன்ற ஆடைகள் அணிவதையும் பெண் பணியாளர்கள் பேஷன் ஆடைகள் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிவதையும் கண்டிப்பாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அனைத்து ஜீப்பு ஓட்டுநர்கள் அலுவலக பணி நேரத்தில் வெள்ளை சட்டை, காக்கி நீளக்கால் சட்டை அணியவும் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆண்கள் வெள்ளை சட்டை, வெள்ளை நீளக்கால் சட்டையும் பெண்கள் மெரூன் கலர் சேலை அல்லது மெரூன் கலர் 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் அணிந்து பணி செய்ய வேண்டும் (லெக்கின்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்) எனவும் இதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

Latest Videos

மேலும் இதர அலுவலர்கள் அலுவலக பணி நேரத்தில் அலுவலக பணி நடைமுறையின் படி நேர்த்தியான ஆடைகள் (ஆண் பணியாளர்கள் பேன்ட் சர்ட் மற்றும் பெண் பணியாளர்கள் சேலைகள் மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்கள்) அணிந்து அலுவலகத்திற்கு வருகை தருவதை உறுதி செய்திடவும் அலுவலக நேரத்தில் ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ் பேன்ட், டிராக் சூட் பேன்ட் போன்ற ஆடைகள் அணிவதையும் பெண் பணியாளர்கள் பேஷன் ஆடைகள் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிவதையும் கண்டிப்பாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. 

click me!