மது போதையில் குமரி கடற்கரையில் ஆட்டம் போட்ட நண்பர்கள்; கடலில் ஒருவர் மாயமானதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Oct 5, 2023, 5:44 PM IST

கன்னியாகுமரி கடலில் மது போதையில் குளிக்கச் சென்ற நபர் கடலில் மாயமான நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் (வயது 40) என்பவர் தனது நண்பர்களான ஜானி, தமிழ்செல்வன், ஜேம்ஸ் மற்றும் ரமேஷ் ஆகிய ஐந்து பேரும் நேற்று காலை 11 மணியளவில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். அதன் பின் கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி மது அருந்தி விட்டு மாலை 5 மணியளவில் மது போதையில் காந்தி மண்டபம் அருகே சென்றுள்ளனர்.

மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தலைமை காவலர் தற்கொலை; ஆந்திராவில் பரபரப்பு

Tap to resize

Latest Videos

undefined

மேலும் மேற்கு கடற்கரை சாலை அன்னை லாட்ஜ் எதிர்புறம் உள்ள கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத, ஆட்கள் இறங்க முடியாத இடத்தில் ஐவரும் கடலில் இறங்க முற்பட்டுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த சண்முகவேலை கடல் அலை இழுத்து சென்றதாகக் கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சமாதி கட்ட பணம் இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? சீமான் ஆவேசம்

இதனால் சுதாரித்துக் கொண்ட மற்ற நான்கு பேரும் கரைக்கு வந்து விட்டனர். ஆனால், சண்முகவேல் மட்டும் மீண்டும் வரவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர், காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!