Urban Local Election: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி... அதிமுக வேட்பாளர் மர்மமான முறையில் திடீர் தற்கொலை?

Published : Feb 10, 2022, 09:09 AM ISTUpdated : Feb 10, 2022, 09:12 AM IST
Urban Local Election: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி... அதிமுக வேட்பாளர் மர்மமான முறையில் திடீர் தற்கொலை?

சுருக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்(34) மர்ம‌மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்(34) மர்ம‌மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வந்தார். 

 இந்நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த விஷ்ணு காஞ்சி போலீசார் ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்