ஒரகடம் அருகே அரசு பேருந்து மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகி உள்ளனர்.
ஒரகடம் அருகே இருக்கும் பண்ருட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டினம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஹமத் அப்துல்லா(20) மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவருடன் பள்ளிக்கரணையைச் சேர்ந்த எமிலோசனி(20) மற்றும் அடையாரைச் சேர்ந்த அர்ஷிதா(20) ஆகியோரும் பயின்று வருகின்றனர். மூவரும் நண்பர்கள் ஆவர்.
undefined
இதனிடையே நேற்று பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டு விட்டு மூன்று பேரும் ஒரு மோட்டார் வாகனத்தில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஓரகடத்தில் இருக்கும் மேம்பாலம் அருகே வந்த போது அரசு பேருந்து ஒன்று அவர்கள் பின்னால் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் வாகனம் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததில் ரகமத் அப்துல்லா மற்றும் எமிலோசனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அர்ஷிதா பலத்த காயங்களுடன் உயரிக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.