இருசக்கர வாகனம் மீது லாரி பயங்கர மோதல்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பெண் காவலர், குழந்தை.!

Published : Apr 14, 2022, 12:30 PM IST
இருசக்கர வாகனம் மீது லாரி பயங்கர மோதல்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பெண் காவலர், குழந்தை.!

சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமா தேவி (26). இவர் நேற்றிரவு பணிமுடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் காவலர், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம் மீது மோதல்

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமா தேவி (26). இவர் நேற்றிரவு பணிமுடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.

குழந்தை பலி

அப்போது, பாலுசெட்டி சத்திரம் அருகே பின்னால் அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் மற்றும் குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், கணவர் ராஜா படுகாயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்ததில் உயிரிழந்த பெண் காவலர் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தப்பியோடிய ஓட்டுநர்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம்.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓயாத டார்ச்சர்..!

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்