கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் மாணவன் ஒருவன் வாங்கி வந்த வெளிமாநில மதுவை வகுப்பறை மேஜை மேல் அமர்ந்து கொண்டு குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். இதனை மாணவிகள் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் வகுப்பறையிலேயே குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து இதுதொடர்பாக 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மது குடித்த மாணவிகள்
undefined
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்து அரசு எடுத்து நடத்தும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் சங்கரா கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் மாணவன் ஒருவன் வாங்கி வந்த வெளிமாநில மதுவை வகுப்பறை மேஜை மேல் அமர்ந்து கொண்டு குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். இதனை மாணவிகள் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வைரல் வீடியோ
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த வீடியோ சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளிடன் விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் மாணவிகளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.
6 பேர் சஸ்பெண்ட்
இதையடுத்து அவர்களது பெற்றோரை அழைத்து விசாரித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறப்பட்டது. தொடர்ந்து, இதுபோல் தவறு நடக்காது என அவர்கள் உறுதியளித்ததன் பேரில் ஒரு மாணவன், 5 மாணவிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க;- பஸ்சில் அரசு பள்ளி சீருடையில் பீர் குடிக்கும் மாணவிகள்.. வைரலாகும் வீடியோ.. அதிர்ச்சியில் பெற்றோர்.!