துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ரஜினிக்கு கருத்துக்கு ஆதரவாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் உள்ளன. அதேபோல், ரஜினிக்கு எதிராக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய நபர்களை தேடி வருகின்றனர்.
துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ரஜினிக்கு கருத்துக்கு ஆதரவாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் உள்ளன. அதேபோல், ரஜினிக்கு எதிராக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
undefined
இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகள் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிக்க தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.