காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் திடீரென தற்போது ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அண்மையில், கொரோனா 2ம் அலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல், கொரோனா தொற்றின் 2வது அலையை நோக்கி இந்தியா வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
undefined
கொரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளின் காக்கும் பொருட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் நேற்று 40 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் மருத்துக்கலூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது முதலி 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு விடுதிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.