காஞ்சிபுரத்தில் பரபரப்பு... மர்ம பைக்குள் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 18, 2021, 08:07 PM IST
காஞ்சிபுரத்தில் பரபரப்பு... மர்ம பைக்குள் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு...!

சுருக்கம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வெடிகுண்டை கைப்பற்றினர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்தல் பரப்புரைக்காக காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ள சமயத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. 

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள கடை ஒன்றிற்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவர்கள் வைத்திருந்த பையை மறந்தது போல் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து பை கேட்பாரற்று கிடப்பதை பார்த்து திறந்து பார்த்த கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டு இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வெடிகுண்டை கைப்பற்றினர். வெடிகுண்டு நிபுணர்கள் அந்த குண்டை செயலிழக்க வைத்தை அடுத்து போலீசார் அந்த வெடிகுண்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்