கோவை ஆட்சியரைத் தொடர்ந்து மற்றொரு ஆட்சியருக்கும் கொரோனா.. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை..!

By vinoth kumarFirst Published Jul 16, 2020, 11:39 AM IST
Highlights

கோவை ஆட்சியரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கன் மத்தியில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது. 

கோவை ஆட்சியரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கன் மத்தியில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் சற்று குறைந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களான, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடல்சோர்வு மற்றும் சளி ஆகிய அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்சியர் பொன்னையாவுக்கு மாவட்டத்திலுள்ள ஒரு காய்ச்சல் முகாமில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவு நேற்று வெளிவந்த நிலையில் அவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் வீட்டிலேயே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் இதுவரை 4,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர். 1,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

click me!