செங்கல்பட்டில் செம காட்டு காட்டும் கொரோனா... ஒரே நாளில் பாதிப்பு புதிய உச்சம்.. பீதியில் பொதுமக்கள்..!

Published : Jun 10, 2020, 05:54 PM IST
செங்கல்பட்டில் செம காட்டு காட்டும் கொரோனா... ஒரே நாளில் பாதிப்பு புதிய உச்சம்.. பீதியில் பொதுமக்கள்..!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் இன்று 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,288-ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் இன்று 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,288-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 18,325 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 307-ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது. 11,730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 244-ஆக உள்ளது. 

இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 2,146 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,285 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. 
 
PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்