மனைவி இறந்த செய்தியை அறிந்து கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறப்பிலும் இணைப்பிரியா ஆசிரியர் தம்பதி மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் மூழ்கியது.
உத்திரமேரூர் அருகே 86 வயது மனைவி இறந்த அதிர்ச்சியில் 91 வயது கணவனும் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (91). இவரது, மனைவி சுலோச்சனா (86). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 2 மகள்களும், அவர்களது கணவர், பிள்ளைகளுடன் தனித்தனியாக வசிக்கின்றனர். மகனுடன் ஆறுமுகமும், சுலோச்சனாவும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
undefined
இதையும் படிங்க;- 2016 ராதாபுரம் தேர்தல் முடிவு.. வழக்கை வாபஸ் வாங்க எதிர்பார்க்கும் அதிமுக இன்பத்துரை.. அப்பாவு முடிவு என்ன?
இவர்கள், வயது மூர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வந்தாலும் உடல் போதியளவு ஒத்துழைக்கவில்லை. வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல எழுந்ததும் சுலோச்சனா, தனக்கான வேலையை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதையும் படிங்க;- திடீர் மயக்கம்...சூடான கூழ் அண்டாவில் விழுந்தவர் பலி...! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்
இதையடுத்து, சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதனிடையே, சுலோச்சனா காலை 6 மணியளவில் இறந்துவிட்டார் என்ற தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் கூறினர். அந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் ஆறுமுகமும் உயிரிழந்தார். மனைவி இறந்த செய்தியை அறிந்து கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறப்பிலும் இணைப்பிரியா ஆசிரியர் தம்பதி மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் மூழ்கியது.