திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : Sep 20, 2022, 02:07 PM ISTUpdated : Sep 20, 2022, 02:16 PM IST
திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

திருமணமான 11 நாளில் மனைவியின் புடவையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 11 நாளில் மனைவியின் புடவையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்பு மகன் அசோக் (27). இவர், மத்திய மீன்வளத்துறையில் உதவியாளராக தற்காலிக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், வேம்பி கிராமத்தைச் சேர்ந்த கருணா மகள் காயத்ரி (26) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அசோக் மனைவி காயத்ரி மற்றும் பெற்றோருடன் தாமலில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால்அசோக்கின் தாய், தந்தை மனைவி காயத்ரி வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி காயத்ரியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டார். 

உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அசோக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தும் பழக்கத்தால் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்