19 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையின் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை.. நடைபயணத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்.!

By vinoth kumarFirst Published Sep 7, 2022, 8:11 AM IST
Highlights

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். 

19 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய ஒற்றுமை பயணம்' எனும் பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

கன்னியாகுமரியில் இன்று தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். இதனையடுத்து, இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நினைவிடத்தில் அரச மரக்கன்றை ராகுல் நட்டு வைத்தார். 

இதனையடுத்து, பகல் 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்ற பிறகு ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணத்தை ராகுல் மேற்கொள்கிறார்.

click me!