ஊரடங்கு நேரத்திலும் மக்கள் பணி... மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..!

By vinoth kumar  |  First Published Apr 12, 2020, 12:57 PM IST

ஊரடங்கு காரணத்தால் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஊரடங்கு காரணத்தால் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்(50). மாகறல் துணை மின் நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தமிழரசி(45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஆற்பாக்கம் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாராமன் என்பவர் மாகறல் துணைமின் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மோகன் நேற்று மாலை ராஜாராமனின் பம்ப் செட் அருகில் உள்ள மின்கம்பத்தில்   ஏறி மின் இணைப்பை  சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மோகன் கம்பத்திலேயே சாய்ந்த படி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாகஉடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெரிய கிரைன் வரழைத்து அவரது உடலை கம்பத்தில் இருந்து இறக்கினர். பின்னர் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!